மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் முடங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். கொடுக்கல், வாங்கலில் கவனம் இருக்கவும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். உடன்பிறப்புகளிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு இருந்தால் அது தானாகவே சரி ஆகி விடும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். எதிர்பாராத தன லாபம், வெற்றி, அதிர்ஷ்டம் ஆகியவற்றை அடையலாம். உத்யோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். தொழில், வியாபார ரீதியாக அலைச்சல் உண்டாகும்.
பரிகாரம் : குல தெய்வத்தை வணங்கி வழிப்படவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com